எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி முழுமையாக முடக்கம்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி ஊடான வாகன போக்குவரத்து பலப்பிட்டி பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் நள்ளிரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியிருந்தது.
அந்த வகையில் ரம்புக்கன பிரதேசத்திலும் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இறுதியில் அது உயிரொன்றை பலிகொண்டது.
இதனை தொடர்ந்தே தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி ஊடான வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
