நாட்டில் தனியார் பேருந்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய பொது நிர்வாக முடக்கல் போராட்டம் (ஹர்த்தால்) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியிருந்தது.
என்ற போதும் எரிபொருள் பிரச்சினை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த நிலை நீடிக்கக்கூடும் என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின் புகையிரத சேவைகள் இன்று முதல் வழமைபோன்று இடம்பெறுவதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
