ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் கூறியுள்ள விடயம்
ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் இன்னமும் நாம் யோசிக்கவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவசர தீர்மானம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஒருசில தமிழ்க் கட்சிகள் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதுபோல் நாம் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது. தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவு எடுப்போம்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ, அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப்படமாட்டோம். முதலில் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்பு வரட்டும். அதன்பின்னர் அது பற்றி யோசிப்பம் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
