இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி தெரிவிப்பு (Photos)

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Rakesh Dec 11, 2022 07:33 PM GMT
Report

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த தீர்வு அடுத்த 25 வருடங்களைக் கருத்தில்கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நாட்டைத் தயார்படுத்தத் தான் தீர்மானித்திருக்கின்றார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி தெரிவிப்பு (Photos) | Srilanka President Special Statement

இளைஞர்களின் பங்களிப்பு

இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்துக்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மாவட்டம் 306 சி2, இன் லியோ ஆட்சேர்ப்பு மற்றும் லியோ தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (11) முற்பகல் கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 6 ஆயிரத்து 500 புதிய லியோக்கள் சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி தெரிவிப்பு (Photos) | Srilanka President Special Statement

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,

"2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களை அதில் இணைந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்தில்கொண்டு, அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள செயற்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி தெரிவிப்பு (Photos) | Srilanka President Special Statement

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் லியோ இந்துனில் உதார பளிஹவதன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் நினைவுச் சின்னங்களைப் பரிசளித்துள்ளார்.

மேலும் லியோ உறுப்பினர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார். கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் எம்.வி.எஸ் குணதிலக்க, முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் லசந்த குணவர்தன, மாவட்ட ஆளுநர் லயன் பெனட் கமலத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவத் தலைவன் லியோ கவீஷ ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்விலல் கலந்துகொண்டனர்.


11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US