ஜனாதிபதி தேர்தலே சிறந்த தெரிவு! நவீன் திஸாநாயக்க
மக்களின் ஆணையை பெறுவதற்கு ஜனாதிபதி தேர்தலே சிறந்த தெரிவு என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம்
மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஒருவர் பதவியை விட்டு வெளியேறிய பின்னர் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க முடியும். எனவே ஆகஸ்ட் 2023 இல் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்க்கலாம் என்று திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று நம்புகின்றார். எனவே தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றும் நவீன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுத்தேர்தல், ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்
உட்பட மூன்று தேர்தல்களையும் அரசியலமைப்பில் திருத்தம் செய்து ஒரே நாளில்
நடத்த வேண்டும் என்ற ஆலோசனை உள்ளது. ஜனாதிபதியிடம் இதே கருத்தை தாமும்
முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
