விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர் (VIDEO)
போர் நிறுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை கவிஞர் காசி ஆனந்தன் புறக்கணித்திருந்ததாக இந்தியாவினை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது தமிழகத்தில் இருந்துக்கொண்டு கவிஞர் காசி ஆனந்தன், பழநெடுமாறன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்த கருத்தின் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தி வருகின்றமை தெளிவாக தென்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவை பொருத்தமட்டில் பழிபோடும் அரசியலே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் இங்கு தீர்வு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri