கூட்டமைப்பின் திட்டத்தை இரகசியமாக அறிந்து ரணில் எடுத்த நகர்வு - அரசியல் ஆய்வாளர் தகவல் (VIDEO)
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கொழும்பில் கூட்டமைப்பினர் ஒன்றுக்கூடியிருந்த போது இந்திய தூதரக அதிகாரியுடன் மேற்கொண்ட இரகசிய கலந்துரையாடல் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக முதன் முதலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு கசியவிடப்பட்டதாக இலங்கையிலுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
அதாவது தங்களது உட்கட்சி பிரச்சினைகளை கையாள முடியாது தமிழர் தரப்பு வெளியில் இரகசியங்களை கசியவிட்டுள்ளதாகவும்,கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த முடிவினை மேற்கொள்வது தலைமையின் கைகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜதந்திர ரீதியிலான தமிழர் தரப்பின் பின்னடைவு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,