அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்
அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் நீடித்த முதல் நாள் பேச்சுவார்த்தை பெரும்பாலும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவிரோதயம் சம்பந்தன், இந்த சந்திப்பின் போது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசரம் என்பதை எடுத்துக்கூறியுள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை
இந்த சந்திப்பின் இறுதியில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தென்னாபிரிக்கர்கள் தமது முதன்மையான மோதலில் அரசியல் ரீதியாக முன்னோக்கி செல்லும் வழியை ஏற்றுக்கொண்ட பின்னரே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அறிமுகப்படுத்தினர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
எஞ்சியுள்ள 'அரசியல் கைதிகளை' விடுதலை செய்ய வேண்டும், காணி சுவீகரிப்பு நிறுத்தப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் உறுதியளிக்க வேண்டும்.
இந்த இரண்டு மாகாணங்களுக்கும் சிறப்பு பொருளாதார அந்தஸ்து வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் தலைமைகள் முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)