மொட்டு ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் நிலை அந்தோகதி! - சஜித் எச்சரிக்கை (photos)

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna
By Rakesh Feb 07, 2023 07:44 PM GMT
Report

இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 'மொட்டு' ஆட்சி தொடர்ந்தால் வறியோர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். பெருமளவு மக்கள் பட்டினியால் செத்து மடியும் அவலநிலையும் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"நாட்டின் துறைமுகங்கள் மற்றும் வங்கிகளை ஒரு சிறிய உத்தரவு மூலம் மூடிய, இறந்த உடலை முழங்கால்களுக்கு மேல் தூக்குவதைத் தடை செய்த, இரவில் விளக்குகள் ஏற்றுவதைக் கூட தடை செய்த 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளின் பலிக்கடாக்கள் நாட்டைக் கட்டியெழுப்பத் தீர்வுகளை வழங்குவோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இந்த நாட்களில் செயற்படுகின்றனர்.

மொட்டு ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் நிலை அந்தோகதி! - சஜித் எச்சரிக்கை (photos) | Srilanka Political Crisis Sajith Premadasa

சுனாமி நிதி மோசடி

2005 இல் இந்த நாட்டை அழித்த சுனாமி நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சவுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்தவர்கள் குறித்த தரப்பினரே. 1988 மற்றும் 1989 இல் நாடு முழுவதும் இரண்டு கிளர்ச்சிகள் நடந்தபோதும் கூட ரணசிங்க பிரேமதாஸ ஒருபோதும் பொருளாதாரத்தைச் சுருக்குவதற்கு முயற்சிக்கவில்லை.

ஒரு தீர்மானத்தை எட்டியதுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஆடைத் தொழிற்சாலைத்திட்டம் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் ஆரம்பித்தார். எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்கள் பக்கம் சிந்தித்தே அவர் செயற்பட்டார். ஆனால், தற்போது நம் நாடு கடனைச் செலுத்தாத நாடாக, அரசே பிரகடனப்படுத்தியவாறு வறிய நாடாக மாறியுள்ளது.

மொட்டு ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் நிலை அந்தோகதி! - சஜித் எச்சரிக்கை (photos) | Srilanka Political Crisis Sajith Premadasa

இவ்வாறான நிலையில் இப்பிரச்சினையில் இருந்து விடுபட பொருளாதாரம் விரிவாக்கல் செய்யப்பட வேண்டுமா? அல்லது பொருளாதாரம் சுருக்கப்பட வேண்டுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எனினும், தற்போதைய அரசு பொருளாதார வீழ்ச்சிக்கான செயற்பாடுகளையே செய்கின்றது. சந்தைத் தேவையைக் குறைத்து மக்களிடையே புழங்கும் பணத்தைக் குறைத்து, நாட்டில் பணவீக்கத்தைக் குறைத்து, அதன் மூலம் நிலுவை விகிதத்தை வலுப்படுத்த நினைத்தாலும், இதனால் மக்கள் மீது பாரிய வரிச்சுமையே சுமத்தப்படும்.

 நடுத்தர வணிகர்கள் வீழ்ச்சி

எதிர்காலத்தில் 45 ஆயிரம் ரூபா வருமானம் ஈட்டுபவர்களுக்கும் வரி விதிக்கப்படும் என ஒரு கதை பரவி வருகின்றது.

இதன் காரணமாக, ஏராளமான புத்திஜீவிகள், நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வரிச் சுமையே இதற்குக் காரணம்.

நாட்டில் பாரியளவில் மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ள நேரத்தில் சமூகத்தின் பல பிரிவினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொட்டு ஆட்சி தொடர்ந்தால் நாட்டின் நிலை அந்தோகதி! - சஜித் எச்சரிக்கை (photos) | Srilanka Political Crisis Sajith Premadasa

விரைவில் மின் கட்டணம் 65 - 75 சதவீதம் என இரு மடங்காக உயரும் என்பதால் நாட்டில் பிரச்சினைகள் மேலும் மோசமாகும். இதனால் வறியோர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.இந்நேரத்தில் நாம் ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்

பொருளாதாரத்தைச் சுருக்காமல் விரிவாக்கல் செய்ய வேண்டும் என்பதுவே அந்த நிலைப்பாடாக அமைய வேண்டும். இதன் ஊடாக மக்களைக் கட்டியெழுப்பல் இடம்பெற வேண்டும். அரசின் இந்த நடவடிக்கையால் பல சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் வீழ்ச்சி கண்டுள்ளனர்" - என்றார்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US