வகுப்பில் நானே கடைசி மாணவன் – எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தாம் வகுப்பில் கடைசி மாணவனாகவே திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
மஹாரகம பிரதேசத்தில் மாணவர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் இரண்டு பிரபல பாடசாலைகளில் தாம் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்ததாகவும் அந்த காலத்தில் தாம் சிறந்த மாணவராக திகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் லண்டன் சென்று சாதாரண தரம் கற்ற போது அந்த வகுப்பில் தாம் கடைசி மாணவர் என குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
மாணவர்கள் முடிந்தால் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் செய்திகளை பார்க்குமாறு அவர் கோரியுள்ளார். ஆங்கில மொழி அறிவினை வளர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வெற்றிகளை ஈட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமக்கு வழங்கிய அறிவுரை யாதெனில், நாள் தோறும் புதிய 10 சொற்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழி அறிவினை விருத்தி செய்து தகவல் தொழில்நுட்ப துறையில் மேம்பட முடியும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.