ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்! மறைமுகமாக வெளிப்படுத்திய சகோதரர்
தற்போதைய குழப்பமான அரசியலில் பொது வெளியில் யார் கண்ணிலும் தென்படாமல் இருப்பதே நல்லது என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவின் எதிர்கால அரசியல்
இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதிர்கால அரசியல் தொடர்பிலும், வெளிநாட்டு பயணம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அவர், கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. அவரை நான் பார்த்து பல நாட்களாகிவிட்டது.அவர் வெளிநாட்டிற்கு செல்லும் போதும் என்னிடம் கூறவில்லை. அங்கிருந்து வரும் போதும் என்னிடம் கூறவில்லை.
ஆகவே அவர் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. கோட்டாபய குறித்த கேள்விகளை அவரிடமே கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.



