இருபது வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி - அகிலவிராஜ் வெளியிட்ட தகவல்
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக இருப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள்
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து ஒரு வருடத்திற்குள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பத்து அல்லது இருபது வருடங்கள் ஆனாலும் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்கவே வல்லமையுடையவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam