ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (12.06.2023) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மூத்த தலைவர் வழங்கியுள்ள அறிவுரை
இந்நிலையில், எஸ்.எம்.சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க, காமினி லொக்குகே நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட எம்.பி.க்கள் குழுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் அழைப்பது அவசியமானால், முதலில் கட்சித் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவும், பின்னர் கட்சியின் ஊடாக ஜனாதிபதியை அழைக்க வேண்டும் எனவும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |