சமூகத்திற்காக பணியாற்றுபவர்களை கண்டுபிடிப்பதே நோக்கம்! சிவநேசத்துரை சந்திரகாந்தன் (PHOTOS)
அரசியல் இல்லாமல் சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது. சமூகத்திற்காக பணியாற்றக் கூடியவர்களை இப்போதே கண்டுபிடித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகளுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கிரீன் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று (27) கட்சி உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒருவர் அரசியலுக்கு வரும்போது கட்சியின் கொள்கைகளை அறிந்திருக்க வேண்டும். மாகாண சபை முறைகளை அறிந்திருக்க வேண்டும்.சர்வ கட்சி கூட்டம் ஏன் நடந்தது. கிழக்கு மாகாண சபையில் விட்ட விலை என்ன போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் அப்படி அறிந்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும். கரண்ட் போனால் ஜெனியை கொடுத்தால் லைட் பத்தும் என தெரிந்திருக்க வேண்டும்.
அதனை போலவே தான் அரசியலுக்கு அவர் படித்து வரும்போது மாகாண சபை முடிந்து விடும். அந்த நேரம் சொல்லுவார்கள் முதல் தடவை தானே நாங்கள் சென்றோம் இரண்டாவது தடவை பார்ப்போம் என கூறுவார்கள். அப்படியானவர்கள் அரசியலுக்குத் தேவையில்லை.
சிறந்த சமூக உணர்வுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சில செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
