இந்தியா போல் வேறு எந்த நாடும் இலங்கைக்கு உதவவில்லையாம் - மிலிந்த மொரகொட
சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்தியா அளித்துள்ள நிதி உதவி உத்தரவாதங்களை இலங்கை மீண்டும் வரவேற்றுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட, டைம்ஸ் ஒப் இந்தியாவிடம் இது தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வீழ்ச்சி இந்தியா இல்லையென்றால் மோசமாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவாகச் செயற்பட்டு இந்தியா வழங்கிய ஆதரவு - உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கைப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உதவியது போன்று வேறு எந்த நாடும் இலங்கைக்கு உதவியிருக்காது என்றும்,
கடந்த 12 மாதங்களில், மூன்றாவது முறையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்
ஜெய்சங்கரின் கொழும்புக்கான பயணம், இலங்கையின் பொருளாதார மீட்சியின்
ஆரம்பத்தையும் குறிக்கின்றது என்றும் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டியுள்ளார்.