கோட்டாபயவிற்கு வழங்கிய தவறான ஆலோசனை! அம்பலப்படுத்திய அமைச்சர்
வரிகளை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய தவறான ஆலோசனையினால் அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 வீதமே அரசாங்க வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி உட்பட பல வரிகள் குறைக்கப்பட்டதாகவும், அப்போது எதிர்க்கட்சிகள் கூட நாடு கேட்காமல் வரிகளைக் குறைப்பதாக குற்றம் சுமத்தியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தை படிப்படியாக அதிகரிக்கத் தவறியதன் காரணமாகவே தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வருமானம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை தீர்த்து பொருளாதாரத்தை பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri