தமிழர் பகுதிகளில் சீன நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது: ஜனநாயக போராளிகள் கட்சி
வடக்கு தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா நிலங்களை ஆக்கிரமித்தால் மக்களை அணி திரட்டிப் போராட்டம் செய்யத்தயங்கமாட்டோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கதிர் தெரிவித்தார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் (30.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னர் தமிழர் நிலப்பகுதிகள் பல்வேறு தரப்பினரால் அக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் நிலப்பகுதிகள்
மகாவலி என்ற போர்வையில் முல்லைத்தீவு மாவட்டம் ஆக்கிரமிப்புக்குள்ளாகிய உள்ள
நிலையில் தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன தமிழர்
நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் வவுனியா மாவட்டத்தில் சீனாவின் ஆதரவோடு தமிழர்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி சீனித் தொழிற்சாலை அமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறியக்கிடைக்கிறது.

சீனித் தொழிற்சாலை
எமது பாரம்பரிய நிலங்களை வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ
தாரை வார்க்க முடியாது.
வவுனியா சீனித் தொழிற்சாலை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் மௌனம் காத்து வருகின்ற நிலையில் நாம் பொறுமை காக்க மாட்டோம்.

குறித்த சீனித் தொழிற்சாலை அமைப்பதற்கான காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரச உயர் மட்டங்களில் பேசப்பட்டு விட்டது.
ஆகவே சீனி தொழிற்சாலைக்கான காணிகளை வழங்குவதற்கான உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடும் வரை காத்திருக்கிறோம் வெளியிடப்பட்டதும் மக்களை அணி திரட்டி போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri