இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை நிற்கும்! அமெரிக்க தூதர் ஜூலி
இலங்கையின் நெருக்கடியான நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டு வரும்வரை அமெரிக்கா துணைநிற்கும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல் வௌியீட்டு விழா கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற போது அதில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை என்றைக்கும் அமெரிக்காவின் நெருங்கியதொரு நட்பு நாடாகும். அந்த வகையில் இன்றைய இலங்கையின் நெருக்கடி நிலைமையை வெற்றி கொள்ள அமெரிக்கா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் அமெரிக்க ராணுவ மற்றும் தூதரக உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.