22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து தேசிய கூட்டுக்குழுவும் பிரஜைகள் குழுவும் கவலை
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதாகக் கூறி, நீதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து தேசிய கூட்டுக்குழுவும் பிரஜைகள் குழுவும் கவலை தெரிவித்துள்ளன.
20 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற சபைக்கு பதிலாக 19 ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு சபையை கொண்டு வர 22வது திருத்தம் முயல்கின்றது.
கோட்டாபய ராஜபக்வினால் 20வது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் தேசிய தணிக்கை ஆணைக்குழு மீண்டும் கொண்டுவரப்பட்டு, 19வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் 22 இன் மூலம் மீள வழங்கப்படுகின்றன.

நாட்டில் தொடரும் ஊழல்
இந்த ஆணைக்குழுக்கள் அனைத்தும் 19 வது திருத்தத்தின் கீழ் இருந்தன. எனினும் இந்த ஆணைக்குழுக்களால் எந்த நடைமுறை நன்மையும் இல்லை என்று தேசிய கூட்டுக்குழுவும் பிரஜைகள் குழுவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.
இன்னமும் நாட்டில் கையூட்டல் மற்றும் ஊழல் என்பன வழமை போல் தொடர்ந்தன. ஹம்பாந்தோட்டை துறைமுகம் கேள்விப்பத்திரம் கோராமல் சீனர்களுக்கு விற்கப்பட்டது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு வினைத்திறன் இன்றி செயற்பட்டமையால் 8 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்ததில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
19வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட தேசிய கொள்முதல் ஆணையத்திற்கு கேள்விப்பத்திரம் கோராமல் கொள்முதல் செய்யப்படும் போது தலையிடும் அதிகாரமோ, முறைகேடாக நடத்தப்படும் கேள்விப்பத்திரத்தை நிறுத்தும் அதிகாரமோ இல்லை.
தேசத்தின் அவலங்களுக்கு தீர்வு
கேள்விப்பத்திர செயல்முறையை கண்காணித்து தேவையான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்வதே இந்த ஆணைக்குழுவுக்கு இருந்த அதிகாரமாகும்.

இந்தநிலையில் நாட்டுக்கு சுயாதீனமான பொதுச் சேவையே அன்றி 'சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியமில்லை. அத்துடன் ஊழலைக் கையாள்வதற்கு சுதந்திரமான சட்டமா அதிபர் ஒருவரை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய கூட்டுக் குழுவும் பிரஜைகள் குழுவும் தெரிவித்துள்ளன.
எனவே 22வது திருத்தம் தேசத்தின் அவலங்களுக்கு தீர்வு காணாத ஒரு பயனற்ற திருத்தமாக இல்லாமல், பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டு வரவேண்டும்.
இந்த நிலையில் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் ஒரு முறைமை மாற்றத்தை செய்ய
முயற்சிக்கவில்லை.
பதிலாக அதே பழைய கட்டமைப்பை வேறு மார்க்கத்தில் அறிமுகப்படுத்துகிறது என்று
தேசிய கூட்டுக் குழுவும் பிரஜைகள் குழுவும் சுட்டிக்காட்டியுள்ளன.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam