கைதி ஒருவருக்கு புகையிலை கொடுத்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அக்கரைப்பற்று நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்த கைதி ஒருவருக்கு 3 மாத கடூழிய சிறைத் தண்டனையும், 1500 ரூபாவும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பீடியினை தனது பாதத்தால் வீசிய ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சா நேற்று முன் தினம் (12.01.2023) தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த நீதிமன்றத்தில் சம்பவ தினத்தில் வழக்கிற்காக கைதி ஒருவர் சிறைச்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு பகல் உணவை கொண்டு வந்த ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மறைத்து எடுத்து வந்த புகையிலை பீடியினை தனது பாதத்தால் சிறைக்கூடத்தில் இருந்தவருக்கு வீசியுள்ளார்.
பொலிஸார் கைது
இதனை அவதானித்த பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் முற்படுத்தியுள்ளனர். இதன்போது நீதிமுறை கட்டளைச் சட்டப் பிரிவு 55(1) (அ) இனை மீறியமைக்கான குற்றச்சாட்டானது குறித்த சந்தேகநபருக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு 3 மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 1500 ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஹம்சாவால் உத்தரவிடப்பட்டுள்ளது.