பொலிஸ் திணைக்கள சமூகவலைத்தளங்களை முடக்கிய ஹேக்கர் குழு கண்டுபிடிப்பு
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் சமூக வலைத்தளங்களை முடக்கிய ஹேக்கர் குழு இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட புத்திக மனதுங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் சமூக வலைத்தளங்களை முடக்கிய ஹேக்கர் குழு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஊடுருவப்பட்ட தகவல்கள்
இவர்கள் இதற்கு முன்னர் அமெரிக்க ராஜாங்க பாதுகாப்புத் திணைக்களத்தின் இணையத்தளம் மற்றும் இந்தியாவின் அரசாங்க இணையத்தளம் ஒன்றையும் முடக்கியிருந்தனர்.
தற்போதைக்கு பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் உள்ளிட்ட சகல வலைத்தளங்களும் பொலிஸ் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊடுருவிய ஹேக்கர்கள் மேற்கொண்ட மாற்றங்கள் மற்றும் ஊடுருவப்பட்ட தகவல்களை அழித்து புதிதாக நிறுவும் மென்பொருளை தற்போது நிறுவியுள்ளோம்.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பொலிஸ் திணைக்கள சமூக வலைத்தளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
