பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம்! பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
அவந்த் கார்டு (Avant Garde) நிறுவனம், இலங்கை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) மோட்டார் சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸ் பிரிவு மறுத்துள்ளது.
அவந்த் கார்டு நிறுவனம் 450cc திறன் கொண்ட 50 மோட்டார் சைக்கிள்களை வழங்குவதாகவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவற்றுக்கான பராமரிப்புச் செலவுகளை ஏற்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள்
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த குற்றச்சாட்டுகள் "முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை" என பொலிஸ் பிரிவு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

சிறப்பு அதிரடிப்படைக்கு அவந்த் கார்டு நிறுவனத்திடமிருந்து மோட்டார் சைக்கிள்களைப் பெறும் எந்த ஏற்பாடும் இல்லை என வலியுறுத்தியுள்ளது.
இணையத்தில் பரவி வரும் இத்தகைய தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என பொலிஸ் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam