படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 16 பேர் கைது (photos)
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு வீடொன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த 8 ஆண்கள், 5 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட கர்ப்பிணி பெண்களும் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்த ஒருவரும் உட்பட (17) பேர் குற்றவிசாரணைப் பிரிவினரால் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்காகக் காத்திருந்த 16 பேர் கொண்ட குழு ஒன்று மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, கொக்குவில், சுவிஸ்கிராமத்தில் உள்ள வீடொன்றில் கடந்த ஒரு மாதகாலமாக தங்கியிருந்த 3 சிறார்கள் மற்றும் 5 பெண்கள் அடங்கலாக 16 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த அவர்கள், ஆட்கடத்தல் முகவர் ஒருவரிடம் பணத்தைச் செலுத்திவிட்டு, படகுமூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்வதற்காக கடந்த ஒரு மாதகாலம் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்கடத்தல் முகவர் குறித்து விசாரணை
அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது அவர்களுக்கான உதவிகளை வழங்கிவந்த நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் பணத்தை பெற்று அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த நபரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கைதானவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக செய்தி: அனதி

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
