நாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக ஆறுகள், ஓடைகள் பெருக்கெடுத்துள்ளன. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் கந்தபளை, டயகம, அக்கரபத்தனை, லிந்துலை பொகவந்தலாவை, உள்ளிட்ட பிரதேசங்களில் பல விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன.
இதனால் சந்தைகளில் மரக்கறிகள் குறைவடைந்துள்ளமையினால், மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்த மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பின் காரணமாக சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் வெள்ளத்தால் அல்லுண்டு செல்லப்பட்டதன் காரணமாக பெருமளவிலான விவசாய குடும்பங்கள் மற்றும் பாவனையாளர்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயத்தினை நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் இந்த சீரற்ற காலநிலை
காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கம் இவர்களுக்குரிய நிவாரணங்களை
பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri