வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனப்பதிவு எண்களுக்குப் பதிலாக, தரமற்ற மற்றும் வண்ணமயமான வாகனப்பதிவு எண்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக (DIG) டபிள்யூ. பி. ஜே. சேனதீரா இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகனப்பதிவு எண்களுக்கு தட்டுப்பாடு
கடந்த காலத்தில் வாகனப்பதிவு எண்களுக்குத் தட்டுப்பாடு இருந்ததால், நாங்கள் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கினோம்.

அந்த காலகட்டத்தில், வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களில் (ஒரு A4 தாளில் கூட) வாகனப் பதிவு எண்ணைக் காண்பிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், வாகன எண்களை வெவ்வேறு வண்ணங்களில், தாம் விரும்பும் நிறத்தில் வண்ணம் பூசி காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே முறையான தரநிலைகள் இல்லாமல் தன்னிச்சையாகத் தயாரிக்கப்பட்ட வாகன எண் அட்டைகளை கொண்ட வாகனங்களை ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri