அடுத்துவரும் 36 மணித்தியாலங்களின் வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை முன் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இன்று (26) மாலை 4 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெளியான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்! பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (26) ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாளை (27) பிற்பகல் சுமார் 2 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவில் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
முன்னெச்சரினக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவ வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் உண்டாகும் சேதங்களின் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam