மஞ்சளும் சிவப்பும் விடுதலைப் புலிகளை குறிக்கும் நிறங்களா..! தேசியக் கொடியிலிருந்து அகற்றுமாறு பதிலடி
சிவப்பும், மஞ்சள் நிறமும் தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கின்றது என்றால், முதலில் நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மாற்றுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதேவேளை தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த (19.09.2023) ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
யாழ். நீதிமன்றின் கட்டளை
இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20ம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்றுமுன் தினம் (21.09.2023) கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியில் வந்து, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் கட்டளை பிறப்பித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |