ஜோன்ஸ்டன்,ரோஹிதவுக்கும் அமைச்சு பதவிகள் - வெளியான தகவல்
பவித்ரா வன்னியாராய்ச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாகியதைத் தொடர்ந்து மேலும் மூவர் அமைச்சர்களாகவுள்ளனர்.
எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகிய மூவருமே அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நின்றார். இப்போது வழங்குவதென்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.
பசில் ராஜபக்ச அமெரிக்கா செல்வதற்கு முன்னர் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்காக 12 பேர் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஒன்றை ஜனாதிபதியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற நிலையில், அவற்றுள் நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன ஆகிய நால்வருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கமாட்டேன் என்று கூறி வந்த நிலையில் தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சினை கேட்கும் ஜோன்ஸ்டன்
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சினை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்றதிலிருந்து ஜோன்ஸ்டன் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் இந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் சாதகமான பதில் எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
இருப்பினும் தற்போதைக்கு அமைச்சுப் பதவிகள் எதனையும் வழங்கும் உத்தேசமில்லை என இந்த இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி கூறியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
