அமைச்சரவை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையின் நிலையற்ற அரசியல் சூழ்நிலையில், அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம், ஒரு மாதக்காலத்துக்கு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டப்படி, விவசாயம், மீன்பிடி, பெருந்தெருக்கள் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அரசாங்கத்தில் இருந்து விரைவில் வௌியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்தக்கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னரே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan