இலங்கையில் இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மேகமூட்டமான வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam