இலங்கையில் சீரற்ற வானிலை! ஒரு வாரப்பகுதியில் மூன்று உயிாிழப்புக்கள்
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 26ஆம் திகதி முதல் முடிவடைந்த ஒரு வாரக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தொிவித்துள்ளது.
முல்லைத்தீவு துனுக்காயில் ஒருவர் மின்னல் தாக்கத்தில் மரணமானாா். ஏனைய இருவா் பதுளையில் மழைப்பாதிப்பால் மரணமாகினா்.
மாத்தளை அம்பன்கங்க கோரள பகுதியில் ஒருவா் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதிப்புக்கள் காரணமாக 112 போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மரம் வீழ்ந்தமையால் கேகாலையில் ஒருவா் காயமடைந்துள்ளாா். 11 வீடுகள் முழுமையாகவும் 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன
இதில் இரத்தினபுாியில் 44 வீடுகளும்,கேகாலையில் 23 வீடுகளும், நுவரெலியவில் 2வீடுகளும்,கண்டியில் 6 வீடுகளும், மாத்தளையில் 13 வீடுகளும், யாழ்ப்பாணத்தில் 5வீடுகளும், பதுளையில் 534 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.