போரில் பதுங்கு குழி மூடிப் பார்வையை இழந்த குடும்ப தலைவன்! பல இழப்புக்களில் நகரும் மாற்றுத்திறனாளியின் குடும்பம்(Video)
உள்நாட்டு போர் முடிந்து 13 வருடங்கள் கடந்த பின்னரும் அதன் வடுக்கள் இன்னும் மாறவில்லை.
போரினால் மனதளவிலும் உடலளவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,போரின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் வடக்கில் போர் தாக்குதலுக்கு உள்ளாகி மாற்றுத்திறனாளிகளாக வாழும் பலரை இப்போதும் காண கூடியதாக உள்ளது.
இவர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது சுய தேவைகளையும் குடும்ப தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மல்லாவி பகுதியில் பெரியான் ராசதுரை என்பவர் போரின் போது பதுங்கு குழி மூடிப் பார்வையை இழந்துள்ளார்.மேலும் முல்லைத்தீவு இறுதி போரில் தனது மகனையும் இழந்துள்ளார்.
இதேவேளை போரின் தாக்கத்தினால் தனது இளைய மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போரினால் பல இழப்புக்களை சந்தித்த,பெரியான் ராசதுரை குடும்பத்தினரின் அவல நிலையை தாங்கி வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
