சட்டரீதியாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது! - ஜனாதிபதியின் கருத்துக்கு தேர்தல் ஆணைக்குழு பதிலடி
அரசமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு பதிலடி
நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) கூடவுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டபூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு
விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள்
ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்தத் விடயத்தைத்
தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan