சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பசில் ராஜபக்ச
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நிச்சயம் நடைபெறும் என மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பை பசில் ராஜபக்சவே செய்வார் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலமான கட்சியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன "எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri