இலங்கையில் மாவட்ட ரீதியில் வாக்காளர்களாக பதிவு பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியானது
எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதிகொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
8327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் மாவட்ட ரீதியாக, கம்பஹாவில் 1,824,742 வாக்காளர்கள் 2022ஆம் ஆண்டின் வாக்காளர்களாக பதிவுப் பெற்றுள்ளனர். கொழும்பில் 1.743,542 பேர் பதிவுப்பெற்றுள்ளனர்.
குருநாகலில் 1,385,703 பேரும்,கண்டியில் 1,159,147 பேரும் பதிவுப்பெற்றுள்ளனர். களுத்துறையில் 992,283பேரும், இரத்தினபுரியில் 902,996 பேரும், காலியில் 884,028 பேரும், அனுரதப்புரத்தில் 717,482 பேரும் வாக்காளர்களாக பதிவுப்பெற்றுள்ளனர்.
கேகாலையில் 696,259 பேரும், பதுளையில் 684,521 பேரும், மாத்தறையில் 672,218பேரும், புத்தளத்தில் 643,279 பேரும், நுவரெலியாவில் 588,850 பேரும், யாழ்ப்பாணத்தில் 577,718 பேரும் வாக்களார்களாக உள்ளனர்.
திகாமடுல்லையில் 534,145 பேரும், ஹம்பாந்தோட்டையில் 506,368 பேரும், மட்டக்களப்பில் 433,346 பேரும் மாத்தளையில் 418,929 பேரும் வாக்காளர்களாக பதிவுப்பெற்றுள்ளனர்.
மொனராகலையில் 384,888பேரும், பொலநறுவையில் 342,031 பேரும், திருகோணமலையி;ல் 301,908பேரும் பதிவுப்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில்,2022 வாக்காளர் பதிவின்படி, வன்னி மாவட்டத்தில் 298,015பேர் வாக்காளர்களாக பதிவுச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமாக 16,692,398பேர் இலங்கையில் வாக்காளர்களாக உள்ளனர்.
இவர்களே உள்ளூராட்சி சபைகளுக்கான 8,327பேரை தெரிவுசெய்யவுள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
