விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்த ரணிலின் தற்போதைய செயல்! அம்மான் படையணி (Video)
தமிழ்க் கட்சிகள் கடந்த 20 வருடங்களாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருகிணைப்பாளருமான ஜெயா சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக் கொள்வதை தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப் போவதில்லை.
சமூக சீரழிவுகளை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படையணி
பிரிந்து செல்வது
நல்லது, பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை. அம்மான் படையணி என்பது
சமூக சீரழிவுகளை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படையணி.
போதைவஸ்துக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக குரல் எழுப்பி பேராடி வருகின்றோம். எமது தலைவரிடமிருந்து அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டு வட மாகாணத்திற்கு தலைவரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்.
எமது சிறார்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த நடவடிக்கையினால் பல கிலோகிராம் போதைப்பொருட்களை கைப்பற்றி விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றோம். வடபகுதியில் எமது இளைஞர்களினால் பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
அதேபோல பாடசாலைகளில் எமது படையணியின் இளைஞர்களினால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை படையினரிடம் ஒப்படைத்து செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்
இவை அனைத்தும் ஒரு மூன்று மாத காலப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன. இச்செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போது பல இளைஞர்கள் எங்களுடன் இணைந்து செயற்படுவதால் அதன் தாக்கம் வீச்சு அதிகமாக இருக்கும்.
எதிர்வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ளதால் இளைஞர்கள், யுவதிகள், முன்னாள் போராளிகள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். ஏனைய கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விட முடியாது.
ஏனென்றால் நாங்கள் தனித்துவமாக போய் கொண்டு இருக்கின்றோம். அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் லஞ்சம், ஊழல் தவிர்த்து வேலை செய்ய விரும்பினால் யாராக வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தந்திரம் மிக்கவுள்ள ஒருவர். 70 வருட பிரச்சினையை 4ஆம் திகதிக்குள் தீர்வு தருவதாக அறிவித்துவிட்டார். பின்னர் தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் தீர்வை கொடுக்க முடியும் என்பதை அறிவிப்பார்கள்.
முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தார். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தார் அவ்வளவே என குறிப்பிட்டுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
