இலங்கையில் மார்ச் 22 முதல் மது உற்பத்தி நிறுத்தம்? பதில் வழங்கும் மதுவரித் திணைக்களம்!
எதிர்வரும் மார்ச் 22 முதல் மது உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை மதுவரித் திணைக்களம் இன்று மறுத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார தடை காரணமாக மது உற்பத்திக்கு போதிய எதனோல் கிடைக்காமை காரணமாகவே மது உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்வதற்காக 23 உரிமம் பெற்ற மதுபான ஆலைகள் உள்நாட்டில் இயங்கி வருவதாக மதுவரித் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மதுபான உற்பத்திக்கு தேவையான எத்தனால் உள்ளிட்ட பொருட்கள் உள்ளூர் சந்தையில் போதுமானளவில் உள்ளன.
எனவே இதுபோன்ற தவறான செய்திகள் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பதற்கும், மதுபான உற்பத்தி நிலையங்களிடையே நெறிமுறையற்ற சந்தைப்படுத்தல் உத்திகளுக்கும் வழிவகுக்கும் என்று கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.



