நீதித்துறையை அச்சுறுத்த நாடாளுமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்! இம்தியாஸ்
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை மிரட்டுவதற்கு நாடாளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறைக்கு எதிராக நாடாளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தி மேற்கொள்ளும் விளையாட்டா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதித்துறைக்கு அச்சுறுத்தல்
சுதந்திரமான தீர்மானங்களை வழங்கும் நீதிபதிகளை அச்சுறுத்துவதற்கு நாடாளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த செயற்பாடு எவ்வாறு ஆரம்பமானது என்பது யாருக்கும் தெரியாது எனவும், இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் குறிப்பிட்டுள்ளார்.
அழுகிப்போன அரசியலை மாற்றக்கோரி நாட்டு மக்கள் வீதியில் இறங்கியதாகத் தெரிவித்த பாக்கீர் மாக்கார், அழுகிப்போன அரசியலில் மயங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள் தமது பிழைப்பைப் பற்றி மட்டும் சிந்திக்கும் நிலை மாற வேண்டும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
