இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின் கீழ் இரண்டாம் நிலை எச்சரிக்கை, பதுளையின் எல்ல மற்றும் பசறைக்கும், மாத்தளையின் ரத்தோட்டை மற்றும் உக்குவளை ஆகிய இடங்களுக்கு இன்று மாலை 4 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களி்ல் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை காலியின் நாகொட, நாவுல மற்றும் எல்பிட்டி, களுத்துறையின் புளத்சிங்கள, கண்டியின் உடுநுவர, கங்கவட்ட கோரள, தொலுவ, கங்கஇஹல கோரள மற்றும் ஹாிஸ்பத்துவ மற்றும் யட்டிநுவர, கேகாலையின் புளத்கோஹஹூபிட்டிய, மாவனல்ல மற்றும் அரநாயக்க
நுவரெலியாவில், நுவரெலிய நகரம் மற்றும் வலப்பனை, இரத்தினபுரியின் எஹலியகொடை ஆகிய இடங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.