”இலங்கையில் சார்புநிலை”யை முறியடிக்க புறப்பட்டுள்ள வெளிநாடுகளின் தூதரக பெண்கள்!(photo)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் ஒன்பது பெண் தலைவர்களும், உயர்மட்ட உள்ளூர் பெண் அரசியல்வாதிகளும் நேற்று பிற்பகல் "சார்பு நிலையை முறியடித்தல்" என்ற நோக்கத்தில் ஒன்று கூடினர்.
இந்தோனேசியாவின் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தக்கூடிய புதிய பங்காளிகளை சந்திப்பதற்கும் புதுமையான திட்டங்களை ஆராய்வதற்கும் இந்த பிரதிநிதிகள் முதல் முறையாக ஒரு குழுவாக சந்தித்தனர்.
இராஜதந்திர மற்றும் பலதரப்பு சமூகத்தின் பங்கேற்பாளர்களில் ஜூலி சுங் (அமெரிக்கா), டிரைன் ஜோரன்லி எஸ்கெடல் (நோர்வே), தஞ்சா கோங்ரிஜ்ப் (நெதர்லாந்து), சாரா ஹல்டன் (யுகே), ரீட்டா மனெல்லா (இத்தாலி), டெமெட் செகெர்சியோக்லு (துருக்கி), ஹோ தி தான் ட்ரூக் ( வியட்நாம்) மற்றும் சிம்ரின் சிங் (ILO) ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்தநிலையில் இலங்கையில் பெண்களுக்கான வலுவூட்டல் துறையில் ஒத்துழைக்கும் முயற்சியின் முதல் முயற்சி இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்கால திட்டங்களில் வழிகாட்டுதல் அமர்வுகள், தன்னார்வ வாய்ப்புகள் மற்றும் மாணவிகளின் பாடசாலை வருகை ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



