பயங்கரவாத சட்டம் எமக்கு புதிதல்ல - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் விஜயகுமார்

Jaffna Sri Lanka Economic Crisis University of Jaffna Inter University Students Federation
By Kajinthan Mar 13, 2023 03:10 PM GMT
Report

தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல எனத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக  மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பில் தெற்கில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் இணைந்து செயல்படுவது தொடர்பில் பரிசீலிப்போம் என தெரிவித்தார்.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத சட்டம் எமக்கு புதிதல்ல - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் விஜயகுமார் | Srilanka Jaffna University Students Union

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் கலந்துரையாடலை மேற்கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கு கழக மாணவர் ஒன்றியம் ஆதரவை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அது மட்டுமல்ல அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பதில்லை எனவும் கூறப்பட்டது. அவர்களுக்கு நாம் தெளிவான ஒரு கருத்தை முன் வைத்தோம்.

தமிழ் மக்கள் மீதான பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்

தமிழ் மக்கள் மீதான பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் எனப் பல வருட காலமாக கோரிய போதும் குறித்த சட்டம் நீக்கப்படாது தமிழ் மக்களை அடக்குவதற்காக பிரயோகிக்கப்பட்டது. ஆதலால் தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டத்துக்கு பழகிப்போன நிலையில் அதை நாம் பெரிய விடயமாக கருதவில்லை.

தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற நிலையில் அதனை தென் இலங்கையை நோக்கி எடுத்த செல்வதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என கேரிக்கை முன்வைத்தாம்.

இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவுக்கு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் ஒரு காரணமாக விளங்குவதை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேட்டோம் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆகவே தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தென் இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்க முன்வருமானால் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பது தொடர்பில் பரிசீலிப்போம் என அவர்களிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US