தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வது வேடிக்கையாக மாறிவிட்டது : துரை வைகோ காட்டம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை கைது செய்வது இலங்கை கடற்படையினருக்கு வேடிக்கையான செயலாகிவிட்டது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசாங்கம், இலங்கையுடன் கடும் போக்கை கடைப்பிடித்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத கடற்றொழில் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதால் பல இந்திய கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது.

எனவே இந்த விடயத்தில் கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வாக இருக்கும் எனில், புதிய கண்ணோட்டத்துடன் அதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
இந்தியா இலங்கைக்கு மிகவும் உதவியாக இருந்தது. குறிப்பாக அவர்கள் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி நிலைக்கு, இந்தியா வழங்கிய உதவிக்கு, இலங்கை சமமான பதிலை வழங்கவேண்டும்.
அத்துடன் முதல்வர் தலைமையிலான தமிழக அரசாங்கம், கடந்த ஆண்டு நெருக்கடியால் பட்டினியால் வாடும் இலங்கையர்களுக்கு தானாக முன்வந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை கடல் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்தது.
எனவே, குறிப்பாக தமிழக கடற்றொழிலாளர்களுடன்; இலங்கை அரசாங்கம் நட்பாக இருப்பது நியாயமாகவும் உண்மையாகவும் இருக்கும் என்றும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam