இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க இன்று இந்தியா விஜயம் செய்ய உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் இது குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விஜயத்தில் இணைபவர்கள்
போக்குவரத்து, சுற்றாடல் அமைச்சுக்களின் செயலாளர்கள், தொடருந்து திணைக்களப் பொது முகாமையாளர், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam