வெளிநாட்டில் வசிக்கும் நபரின் கொழும்பு வீட்டின் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம்
கொழும்பு புறநகர் பகுதியான அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில், உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலுக்கு தலைமை தாங்கும் முத்துவா என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவின் வீட்டின் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டின் மீது சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குற்றச்செயல்கள்
துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரி மற்றும் நவகமுவ பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச்செயல்கள் முத்துவாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam