மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு அறிவிப்பு
2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு டிசம்பர் 22 ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26 ஆம் திகதியும் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை முடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.