தங்க விலை அதிகரிப்பினால் இலங்கையில் ஆபத்தில் இலட்சக்கணக்கானோர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் பேர் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் பாலசுப்பிரமணியன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவை தாண்டியுள்ள நிலையில், இலங்கையில் தங்கத்தின் தேவை 50% க்கும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், பல நகைக்கடைக்காரர்கள் தங்கள் பணியாளர்களை குறைக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் குறையும் ஆர்வம்
தங்க நகைகளை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் குறையும் பட்சத்தில் சுமார் மூன்று இலட்சம் பேர் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, பணி நீக்கங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் இலங்கையின் பாரம்பரிய வர்த்தகங்களில் ஒன்றான நகை தொழில், ஏற்கனவே சுமார் 300,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததற்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே காரணம் என்றும் விளக்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
