இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை
புதிய இணைப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (26) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
இலங்கையில் ஒரு மாதத்திற்குள் ஒரு பவுண் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 30,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சந்தையில் தங்க புழக்கம் மீண்டும் அதிகரிப்பு
24 கரட் தங்கத்தின் விலை இன்று 397,000 ஆக பதிவானதாகியுள்ள நிலையில்,இந்த மாத தொடக்கத்தில், அதன் விலை 368,425 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கத்தின் விலை இன்று 367,000 ரூபா ஆக பதிவானதாகியுள்ள நிலையில், மாத தொடக்கத்தில் 340,400 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஜனவரி 19 அன்று ரூ. 385,000 ஆக இருந்த ஒரு தங்க நெக்லஸ் இன்று ரூ. 400,000 ஐத் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, தங்கப் பொருளின் குறைந்தபட்ச விலை ரூ. 395,000 இல் தொடங்குகிறது என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த விலை அதிகரிப்பு காரணமாக பலர் வீடுகள், வங்கிப் பெட்டகங்கள் மற்றும் அடகுக்கடைகளில் உள்ள தங்கப்பொருட்களை விற்கத்தூண்டப்பட்டுள்ளதுடன்,சந்தையில் தங்கத்தின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (26) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலரை கடந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
இலங்கையின் தங்க நிலவரம்
இதற்கமைய, செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரங்களுக்கமைய, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 397,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கடந்த வௌ்ளிக்கிழமை24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 385,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 356,000 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam