மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்! இலங்கைக்கு காத்திருக்கும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் (22) களனி அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் நீண்ட காலம் நீடித்தால், அதன் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும், நாம் வாழும் இந்த உலகளாவிய சமூகத்தில், உலகில் எங்கு நடந்தாலும் ஒரு சம்பவம் மற்ற நாடுகளைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
தவிர்க்க முடியாத இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த தாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும், அதற்கான திட்டம் தங்களிடம் உள்ளதாகவும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri