எரிபொருள் கோரி வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு விடுதலை (VIDEO)
கிளிநொச்சி - பரந்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கோரி வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய நாளுக்கான இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வரிசையில் காத்திருந்த மக்களே A9 வீதியினை மறித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் பொலிஸாரிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
இதன்போது அப்பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் ஒருவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய நிலையில்,பொதுமக்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைவாக குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மக்களிற்கு தொடர் இலக்கம் வழங்கப்பட்டு எரிபொருள் வந்ததும்
வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதினை தொடர்ந்து மக்கள் அமைதியாக கலைந்து
சென்றுள்ளனர்.