பிரசவ வலியினால் துடித்த பெண்ணுக்கு உதவிய பொலிஸார்! குவியும் பாராட்டு
யாழ்.தொல்புரம் பகுதியில் பெண்ணொருவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் தமது பொலிஸ் வாகனத்தை கொடுத்து உதவியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்ட வேளை அவர் முச்சக்கர வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது திடீரென முச்சக்கர வண்டியில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.
இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் முச்சக்கர
வண்டிக்கு பெட்ரோல் வழங்கிய நிலையில், முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இயங்க
மறுத்துள்ளது.
இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தினை வழங்கி குறித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு உதவியுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி
வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
